தொழில் வழிகாட்டுதல் கருத்தரங்கம்
புதுச்சேரி: யோக்டோ பவுண்டேஷன் சார்பில், 9 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களின் உயர்கல்வி மற்றும் எதிர்கால தொழில் வாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 'என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம்' தலைப்பில் இலவச தொழில் வழிகாட்டுதல் கருத்தரங்கம் நடந்தது. சிவ வள்ளி விலாஸ் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர். நிதியின் கீழ் கம்பன் கலையரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் சப் கலெக்டர் சுதாகர், அரசு வழக்கறிஞர் ராமச்சந்திர மூர்த்தி, யோக்டோ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சதீஷ்குமார், தொழில் வழிகாட்டி யோகி ஆகியோர் மாணவர்கள் தங்களின் திறமையை அறிந்து சரியான கல்வி மற்றும் தொழிலைத் தேர்ந்தெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தினர். சிவ வள்ளி விலாஸ் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சபரீஷ் வாழ்த்தி பேசினார். கருத்தரங்கில், மாணவர்களின் கல்வி மற்றும் தொழில் தொடர்பான பல்வேறு சந்தேகங்களுக்கு நிபுணர்கள் நேரடியாக விளக்கமளித்தனர். மேலும், உயர்கல்விக்கான பல்வேறு படிப்புகள், 10 மற்றும் பிளஸ் 2 படிப்பிற்கு பின் உள்ள கல்வி வாய்ப்புகள், அரசு நுழைவுத் தேர்வுகள், அரசு வேலை வாய்ப்புகள், தனியார் துறையில் உள்ள தொழில் வாய்ப்புகள் மற்றும் தொழில் திட்டமிடல் தொடர்பான முக்கிய தகவல்கள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டன. நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை யோக்டோ பவுண்டேஷன் செய்திருந்தனர்.