மாட்டின் உரிமையாளர் மீது வழக்கு
புதுச்சேரி: போக்குவரத்திற்கு இடையூறாக மாட்டை, ரோட்டில் மேயவிட்ட உரிமையாளர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். கருவடிக்குப்பம் - முத்தியால்பேட்டை சாலையில், நேற்று போக்குவரத்திற்கு இடையூறாக பசு மாடு மேய்ந்தது. இதனால், போக்குவரத்து தடைபட்டது. தகவலறிந்த லாஸ்பேட்டை போலீசார் விரைந்து சென்று, மாட்டை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்து, மாட்டை ரோட்டில் விட்ட அதன் உரிமையாளரான லாஸ்பேட் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜேஷ் (எ) ராஜ், 28; என்பவர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.