உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முன் விரோத தகராறு 2 பேர் மீது வழக்கு

முன் விரோத தகராறு 2 பேர் மீது வழக்கு

புதுச்சேரி: மருந்து கம்பெனி ஊழியரை தாக்கிய 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். சேதராப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்கணேஷ், 34; தனியார் மருந்து கம்பெனி ஊழியர். இவருக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த அய்யாதுரை குடும்பத்தினருக்கும் இட பிரச்னை தொடர்பாக முன்விரோதம் உள்ளது. நேற்று முன்தினம் மதியம் அய்யாதுரை, அவரது மகன் யுவராஜ்,30; ஆகியோர் பிரச்சனை உள்ள இடத்தில் மதில் சுவர் அமைத்தனர். இதனை தட்டிக்கேட்ட ஜெய்கணேைஷ சரமாரியாக தாக்கினர். இதுகுறித்து ஜெய்கணேஷ் கொடுத்த புகாரின் பேரில் சேதாரப்பட்டு போலீசார், அய்யாதுரை, யுவராஜ் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை