விளம்பர பலகை 3 பேர் மீது வழக்கு
பாகூர்: போக்குவரத்திற்கு இடையூறாக, சாலையில் விளம்பர பலகை வைத்த வியாபாரிகள் 3 பேர் மீது போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, புதுச்சேரி - கடலுாார் சாலை மணப்பட்டு சாலை சந்திப்பு அருகே சாலையில் வைக்கப்பட்டு இருந்த காபி ஷாப், நாட்டு மருந்து கடை, பிள்ளையார்குப்பம் சந்திப்பில் டிபன் கடை விளம்பர பெயர் பலைகையை பறிமுதல் செய்தனர். புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார், கடைகளின் உரிமையார்களான மதிக்கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த வெங்கடேஷ்29;, புதுநகரை சேர்ந்த வெங்கடேஷ் 47; காட்டுக்குப்பத்தை சேர்ந்த தேவராஜ் 50; ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.