உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  எதிர்க்கட்சி தலைவர் உட்பட 4 எம்.எல்.ஏ.,க்கள் மீது வழக்கு

 எதிர்க்கட்சி தலைவர் உட்பட 4 எம்.எல்.ஏ.,க்கள் மீது வழக்கு

புதுச்சேரி: போலி மருந்து விவகாரத்தில் அரசை கண்டித்து, போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சி தலைவர் சிவா உட்பட 4 எம்.எல்.ஏ., மீது பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். போலி மருந்துகளின் கேந்திரமாக புதுச்சேரியை மாற்றிய அரசை கண்டித்தும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தி.மு.க., சார்பில், சட்டசபை முற்றுகைப் போராட்டம் எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க., மாநில அமைப்பாளருமான சிவா தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், போலீஸ் தடுப்புகளை தாண்டி சட்டசபையை முற்றுகையிட முயன்ற தி.மு.க.,வினரை கைது செய்து அழைத்து சென்றனர். இந்நிலையில், தடையை மீறி கூட்டமாக போராட்டத்தில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சிவா, எம்.எல்.ஏ.,க்கள் சம்பத், செந்தில்குமார், அனிபால் கென்னடி உள்ளிட்ட 249 பேர் மீது பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை