உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரகளை செய்த 4 பேர் மீது வழக்கு

ரகளை செய்த 4 பேர் மீது வழக்கு

பாகூர் : பாகூர் சப் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். பரிக்கல்பட்டு தனியார் செவிலியர் கல்லுாரி அருகே நான்கு பேர் பொதுமக்களை ஆபாசமாக திட்டி ரகளையில் ஈடுபட்டனர். அவர்களை, போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்கள், கடலுார் வடக்குப்பாளையத்தை சேர்ந்த ராஜீவ்காந்தி 36; விஸ்வநாதபுரம் அருண்குமார் 32; திருப்பாதிரிப்புலியூர் பழனி 35; செம்மண்டலம் ரமேஷ், 48, என்பது தெரியவந்தது. இது குறித்து அவர்கள் 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ