உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பேனர் வைத்த 5 பேர் மீது வழக்கு

பேனர் வைத்த 5 பேர் மீது வழக்கு

புதுச்சேரி: புதுச்சேரியில், சாலையில் பேனர் வைத்த 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.புதுச்சேரியில் பேனர் மற்றும் கட் அவுட் வைக்க அரசு தடை செய்துள்ளது. அதை மீறி அனுமதியின்றி பேனர் வைப்பவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், மேட்டுப்பாளையம் சந்திப்பில், பேனர் வைத்தது தொடர்பாக, இசைமணி என்பவர் மீதும், ஒப்பந்ததாரர் மீதும் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.அதே போல், முத்தியால்பேட்டை, மணிகுண்டு அருகில் பேனர் வைத்த அடையாளம் தெரியாத 3 நபர்கள் மீது முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி