உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இ.சி.ஆரில் பேனர், கொடி கம்பம் தி.மு.க.,வினர் மீது வழக்கு

இ.சி.ஆரில் பேனர், கொடி கம்பம் தி.மு.க.,வினர் மீது வழக்கு

புதுச்சேரி: புதுச்சேரி இ.சி.ஆரில் அனுமதியின்றி பேனர் வைத்த தி.மு.க.,வினர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.புதுச்சேரியில் அனுமதி இல்லாமல் பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.தடையை மீறி நேற்று முன்தினம் இ.சி.ஆரில், போக்குவரத்திற்கு இடையூறாகவும், நடைபாதையை ஆக்கிரமித்தும் தி.மு.க.,வினர் கட்சி தலைவர்களை வரவேற்று டிஜிட்டல் பேனர்கள், கொடி கம்பங்கள் வைத்திருந்தனர்.பொதுப்பணித்துறை, உதவி பொறியாளர் ஜெயராஜ் புகாரின்பேரில், லாஸ்பேட்டை போலீசார் அனுமதியின்றி பேனர், கொடி கம்பம் வைத்த தி.மு.க.,வினர் மீது வழக்குப் பதிந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை