பா.ஜ., பெண் நிர்வாகிக்கு மிரட்டல் மாஜி பிரமுகர் மீது வழக்கு
அரியாங்குப்பம்: பா.ஜ., மகளிரணி நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்த மாஜி நிர்வாகி மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். மணவெளி சிவலிங்கபுரத்தை சேர்ந்தவர் கலைவாணன். ஏற்கனவே, பா.ஜ.,வில் பொறுப்பில் இருந்த இவர், சமீப காலமாக சமூக வலைதளங்களில் பெண்களை தரக்குறைவாக பேசி பதிவிட்டு வந்தார். அதனை தட்டிக் கேட்ட அரியாங்குப்பத்தை சேர்ந்த, பா.ஜ., மகளிரணி நிர்வாகி பிரியாவிற்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து பிரியா அளித்த புகாரின்பேரில், கலைவாணன் மீது அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.