மேலும் செய்திகள்
கிரைம் செய்திகள்...
24-Jan-2026
புதுச்சேரி: கர்ப்பிணி மனைவியை தாக்கிய கணவர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர். தொண்டமாநத்தம் அரசு பள்ளி வீதியைச் சேர்ந்தவர் வானதி, 26. இவர், கடலுார் மாவட்டம், கீழ் குமாரமங்கலம் வினித்குமார் 29, என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். வானதி 5 மாதம் கர்ப்பிணி. இதனால் அவரது தாய் வீட்டில் வானதி வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் வானதி வீட்டிற்கு சென்ற வினித்குமார், வானதியை சரமரியாக தாக்கி விட்டு, அங்கிருந்து சென்றார். புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
24-Jan-2026