உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு

 மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு

புதுச்சேரி: விவாகரத்து கேட்டு காதல் மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கணவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். ரெட்டியார்பாளையம், உழவர்கரை மடத்து வீதியை சேர்ந்தவர் பிரியதர்ஷினி, 28. இவர், அதே பகுதியை சேர்ந்த ஜெரால்டு என்பவரை காதலித்து கடந்த 2024ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் தினசரி ஜெரால்டு மது போதையில் வீட்டிற்கு வந்து, பிரியதர்ஷினை தகாத வார்த்தையால் திட்டி, அடித்து துன்புறுத்தி வந்தார். கடந்த 13ம் தேதி பிரியதர்ஷினி, அவரது மாமனார், மாமியாருடன் பேசிக் கொண்டிருந்தபோது, குடிபோதையில் வீட்டிற்கு வந்த ஜெரால்டு பிரியதர்ஷினியிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது, தான் வேறு ஒரு பெண்ணை காதலித்து வருவதாகவும், அவளை தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன். எனக்கு விவாகரத்து கொடுத்து விட்டு, வீட்டை விட்டு வெளியேறும்படி கூறி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். பிரியதர்ஷினி புகாரின் பேரில், ஜெரால்டு மீது ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ