உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வியாபாரியை தாக்கியவர் மீது வழக்கு

வியாபாரியை தாக்கியவர் மீது வழக்கு

புதுச்சேரி: லாஸ்பேட்டை ஜீவானந்தபுரத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன், 56. இவர், ஜீனா காலனி, அரசு தொடக்கப் பள்ளி அருகே கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் லாஸ்பேட்டைச் சேர்ந்த டிரைவர் மனோஜ் என்பவர், குடிபோதையில் கடையின் எதிரே சிறுநீர் கழித்தார்.இதனை ராமச்சந்திரன் தட்டிக்கேட்டதால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த மனோஜ், அங்கிருந்த பைக் சைலன்சரை எடுத்து, ராமச்சந்திரனை சரமாரியாக தாக்கினார். இதையடுத்து, பொதுமக்கள் அங்கு திரண்டதால், மனோஜ் அங்கிருந்து தப்பியோடினார். ராமச்சந்திரன் புகாரின் பேரில், கோரிமேடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை