மேலும் செய்திகள்
பெயின்டர் கொலை; ஒடிசா வாலிபர் கைது
24-Jan-2025
புதுச்சேரி: முன்விரோதத்தில் வீடு புகுந்து தம்பதியை தாக்கியவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.புதுச்சேரி முருங்கப்பாக்கம் பள்ளத் தெருவை சேர்ந்தவர் அருண்குமார், 41; பிளம்பர். இவருக்கும், இவரது தங்கை கணவர் பாலசுப்ரமணிக்கும் இடையே, சொத்து சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது.இந்த முன் விரோதம் காரணமாக, கடந்த 26ம் தேதி பாலசுப்ரமணி, அருண்குமார் வீட்டிற்கு சென்று, அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தகராறு செய்துள்ளார். மேலும், அருண்குமாரையும், கர்ப்பிணியான அவரது மனைவி செண்பகத்தையும் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இது குறித்து, அருண்குமார் அளித்த புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
24-Jan-2025