பெண்ணுக்கு மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு
புதுச்சேரி; நைனார்மண்டபம், மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் புவனேஸ்வரி, 50, இவரது கணவர் இறந்து விட்டார். அவரது பெயரில் அறக்கட்டளை துவங்கி, பல்வேறு சமூக பணிகளை செய்து வருகிறார்.இவர் நடத்தி வரும் அறக்கட்டளைக்கு, செயலாளராக மரக்காணத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரை நியமித்து, பணி செய்து வந்தார்.அவர் முறையாக கணக்கு காட்டாமல், இருந்தது குறித்து புவனேஸ்வரி கேட்டுள்ளார். அதன்பின், அவர் வேலையில் இருந்து நிறுத்தப்பட்டார். அதையடுத்து, புவனேஸ் வரிடம் பணம் பறிக்கும் நோக்கத்தில், கிருஷ்ணமூர்த்தி மொபைல் போன் மூலம் மிரட்டல் விடுத்தார்.இதுகுறித்து, அவர் கொடுத்த புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.