உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாமியாரை தாக்கிய மருமகன் மீது வழக்கு

மாமியாரை தாக்கிய மருமகன் மீது வழக்கு

புதுச்சேரி:மாமியாரை தாக்கிய மருமகன் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். புதுச்சேரி சோனாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சரோஜா,50;, இவருக்கு 4 மகள்கள் உள்ளனர். இதில் 2வது மகள் தமிழ்செல்வியுடன், சரோஜா புதுச்சேரி கடற்கரை சாலையில் வியாபாரம் செய்து வருகிறார். தமிழ்செல்வியின் கணவர் தர்மா மனைவியை அடிக்கடி தாக்குவதால் அவர் தாய் வீட்டில் வசித்து வருகின்றார். மனைவியை குடும்பம் நடத்த அனுப்பாததால் மாமியார் குடுப்பத்தினர் மீது தர்மாவுக்கு கோபம் இருந்துவந்தது. இந்நிலையில் கடந்த 14ம் தேதி இரவு சரோஜா தண்ணீர் வாங்க கடைக்கு சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த தர்மா, தான் மறைத்து வைத்திருந்த கண்ணாடி பாட்டிலால் சரோஜாவை தாக்கிவிட்டு தப்பினார். சரோஜா புகாரின் பேரில் பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி