உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிறுமி கர்ப்பம் வாலிபர் மீது வழக்கு

சிறுமி கர்ப்பம் வாலிபர் மீது வழக்கு

திருக்கனுார் : சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய பெயிண்டர் மீது போக்சோ பிரிவில் போலீசார் வழக்கு பதிந்தனர்.புதுச்சேரி, எல்லை பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் ராகுல், 20; பெயிண்டர். இவர் இளம்பெண் ஒருவரை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அப்பெண் கர்ப்பமடைந்து, பரிசோதனைக்காக புதுச்சேரி ராஜிவ் காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்குச் சென்றார்.அங்கு, பரிசோதனை செய்த அப்பெண்ணிற்கு, 18 வயது பூர்த்தியாகவில்லை என்பது தெரியவந்தது. இதுகுறித்து டாக்டர்கள், புதுச்சேரி குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து, புதுச்சேரி குழந்தைகள் நல அதிகாரி அளித்த புகாரின் பேரில், திருக்கனுார் போலீசார் ராகுல் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ