உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  தம்பதியை தாக்கிய இருவர் மீது வழக்கு

 தம்பதியை தாக்கிய இருவர் மீது வழக்கு

புதுச்சேரி. நவ.26-: தம்பதியை தாக்கிய இருவர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர். கருவடிகுப்பம்,சப்தகிரி நகரை சேர்ந்தவர் கோபிநாதன் மனைவி சத்யா, 45; இவர் சாமிபிள்ளைத் தோட்டத்தில் வாங்கிய இடம் சம்பந்தமாக இவருக்கும், லாஸ்பேட்டையை சேர்ந்த சந்தானம்,45; இவர்களுக்கிடையே பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில், சந்தானம் அழைத்ததின் பேரில் கோபிநாதன் அவரது மனைவி சத்யா இவருவரும் நேற்று முன்தினம் அவரது வீட்டிற்கு சென்றனர். அப்போது, சந்தானம் அவரது மனைவி சரசு ஆகிய இருவரும் சேர்ந்து வீட்டுக்கு வந்த தம்பதியை தகாத வார்த்தையால் திட்டி தாக்கியுள்ளனர். இதுகுறித்த, புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார், கோபிநாதன், அவரது மனைவி சத்யா மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ