மேலும் செய்திகள்
கிரைம் செய்திகள்
05-Dec-2024
புதுச்சேரி: லோன் வாங்கி தருவதாக பெண்ணிடம் ஆவனங்களை பெற்று மோசடி செய்தவர் மீது போலீசார் வழக்குப்பதிந்துள்னர். வில்லியனுார் வி.மணவெளி தண்டுகரை வீதியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி 29, இவரும், இவரது கணவர் சுரேஷ் ஆகியோர் வளைகாப்பு செலவுக்காக முத்தியால்பேட்டையைச் சேர்ந்த சாந்தனு 30, என்பவரிடம் கடன் கேட்டுள்ளனர். அதற்கு சாந்தனு தனியார் நிதி நிறுவனத்தில் பணம் வாங்கி தருவதாக கூறி, விஜயலட்சுமி ஆவணங்களை எடுத்து வர கூறி அவரது ஆவணத்தில் இரண்டு ஆப்பிள் போன் வாங்கி மோசடி செய்துள்ளார்.இது குறித்து விஜயலட்சுமி வில்லியனுார் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
05-Dec-2024