உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குடிநீர் வரி வசூல் மையத்தில் ரூ.4.29 லட்சம் மோசடி; 2 எம்.டி.எஸ்., ஊழியர்கள் மீது வழக்குப் பதிவு

குடிநீர் வரி வசூல் மையத்தில் ரூ.4.29 லட்சம் மோசடி; 2 எம்.டி.எஸ்., ஊழியர்கள் மீது வழக்குப் பதிவு

புதுச்சேரி; பொதுப்பணித்துறை குடிநீர் வரி வசூல் மையத்தில் பணியாற்றிய 2 எம்.டி.எஸ்., ஊழியர்கள் 4 லட்சத்து 29 ஆயிரம் மோசடியில் ஈடுபட்டது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி, பொதுப்பணித்துறை பொது சுகாதார கோட்டம், லாஸ்பேட்டை மடுவுபேட்டில் அமைந்துள்ள குடிநீர் வரி வசூல் மையத்தில், அப்பகுதி மக்கள் தினசரி குடிநீர் வரி செலுத்தி ரசீது பெற்று வருகின்றனர். அங்கு, பொதுமக்கள் செலுத்தும் குடிநீர் வரியை எம்.டி.எஸ்.,யான ராஜசேகர் என்பவர் வசூல் செய்து வந்தார்.இந்நிலையில், மடுவுபேட் பகுதியில் குடிநீர் வரி வசூல் செய்யப்பட்ட 2022ம் ஆண்டு செப்டம்பர் முதல் அக்டோபர் வரையிலான 2 மாதங்களில் 295, 503, 504, 508, 510, 810 ஆகிய 6 வரி வசூல் ரசீது புத்தகங்கள் பொதுப் பணித்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப் படவில்லை.இதையடுத்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் ராஜசேகரிடம் ரசீது புத்தகங்கள் ஒப்படைக்காதது குறித்து விசாரித்தபோது, அந்த ரசீது புத்தகங்கள் தொலைந்து விட்டதாக கூறி, ராஜசேகர் 3 லட்சத்து 90 ஆயிரத்து 780 ரூபாய் மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.இதேபோல், அரியாங்குப்பம் பொதுப்பணித்துறை குடிநீர் வரி வசூல் மையத்தில் பணியாற்றிய எம்.டி.எஸ்., ஊழியர் பெரியசாமி, 2022ம் ஆண்டுஜூன் முதல் அக்டோபர் வரையிலான5 மாதங்களில் வசூல் செய்த தொகையில் 38 ஆயிரத்து 550 ரூபாயைஅலுவலகத்திற்கு செலுத்தாமல் மோசடி செய்தது தெரியவந்தது.இதுகுறித்து பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் உமாபதி அளித்த புகாரின் பேரில், மோசடியில் ஈடுபட்ட இருவர் மீதும் புதுச்சேரி லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி