பெண்ணை தாக்க முயன்ற 2 பேர் மீது வழக்கு பதிவு
பாகூர்: பாகூர், திருமால் நகர், இரண்டாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் மஞ்சுளா, 33. இவர் வீட்டு வசலில் செங்கல் அடுக்கி வைத்திருந்தார். கடந்த 18ம் தேதி அதே பகுதியை சேர்ந்த பிரசாந்த், முருகன் ஆகியோர் டிப்பர் லாரியில் ஜல்லி ஏற்றிக் கொண்டு அவ்வழியாக சென்றனர். அப்போது, லாரி மோதி மஞ்சுளா வீட்டு வாசலில் அடுக்கி வைத்திருந்த செங்கற்கள் சேதமடைந்தன. இது குறித்து மஞ்சுளா, அவர்களிடம் நியாயம் கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த இருவரும் மஞ்சுளாவை ஆபாசமாக திட்டி, இரும்பு கம்பியால், தாக்க முயன்றனர். மஞ்சுளா அளித்த புகாரின் பேரில், பிரசாந்த், முருகன் ஆகியோர் மீது பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.