உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / எம்.எல்.ஏ., உதவியாளருக்கு கொலை மிரட்டல் 3 பேர் மீது வழக்கு பதிவு

எம்.எல்.ஏ., உதவியாளருக்கு கொலை மிரட்டல் 3 பேர் மீது வழக்கு பதிவு

புதுச்சேரி: நேரு எம்.எல்.ஏ., உதவியாளருக்கு, கொலை மிரட்டல் விடுத்த விலங்கு நல ஆர்வலர்கள் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி, கோவிந்த சாலை, முதல் குறுக்குத் தெருவை சேர்ந்தவர் செங்குட்டுவன், 45; நேரு எம்.எல்.ஏ.,வின் உதவியாளர். நேற்று முன்தினம் கோவிந்த சாலையில் சுற்றித்திரிந்த தெரு நாய் ஒன்று, அப்பகுதியை சேர்ந்த 7வது சிறுவனை கடித்ததால், படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் தொகுதி எம்.எல்.ஏ.,விடம் தகவல் தெரிவித்தால், அவரது உதவியாளரான செங்குட்டுவன், சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தார். அங்கு வந்த விலங்குகள் நல ஆர்வலர் அசோக்ராஜ், ஜெயமணி உட்பட 3 பேர் தொகுதி எம்.எல்.ஏ.,வின் நடவடிக்கைகள்குறித்து தரகுறைவாக பேசியதால், வாக்குவாதம் ஏற்பட்டது.ஆத்திரமடைந்த மூவரும் செங்குட்டுவனுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். அவரது புகாரின் பேரில், அசோக்ராஜ் உட்பட மூவர் மீது பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !