உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குப்பை கொட்டிய தகராறு 4 பேர் மீது வழக்கு பதிவு

குப்பை கொட்டிய தகராறு 4 பேர் மீது வழக்கு பதிவு

பெரிய காலாப்பட்டு, சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பழனி மனைவி கவியரசி, 42. இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த செல்வி, அவரது கணவர் பிரகாஷ் இடையே வீட்டின் வெளியே குப்பைகள் கொட்டுவதால் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது. நேற்று முன்தினம் மீண்டும் குப்பைகள் கொட்டுவதால், தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. கோபடைந்த செல்வி, அவரது கணவர் பிரகாஷ் மற்றும் கவியரசி அவரது மருமகன் நந்தினி ஆகியோர் கல்லால் தாக்கி கொண்டனர். கவியரசி அளித்த புகாரின் பேரில் செல்வி, பிரகாஷ் மீதும், பிரகாஷ் புகாரின் பேரில் கவியரசி, நந்தினி மீதும் காலாப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை