உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபர் மீது வழக்கு பதிவு

இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபர் மீது வழக்கு பதிவு

பாகூர் : திருமணம் செய்து கொள்வதாக கூறி இளம் பெண்ணை, ஏமாற்றி விட்டு, வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்ட வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். கிருமாம்பாக்கம் பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண்ணும், நரம்பை கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் 29; என்பவரும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். மணிகண்டன், அப்பெண்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி தனிமையில் சந்தித்து வந்துள்ளார். இந்நிலையில், மணிகண்டன் சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்று விட்டார். மீண்டும் சொந்த ஊருக்கு வந்த மணிகண்டன் கடந்த சில நாட்களுக்கு முன், வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மணிகண்டனின், முன்னாள் காதலி, கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில், தன்னை திருமணம் செய்வது கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, புகார் அளித்தார். அதன்பேரில், அவர் மீது, போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !