உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் மீது சி.பி.ஐ., வழக்கு

மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் மீது சி.பி.ஐ., வழக்கு

புதுச்சேரி: மாசுகட்டுப்பாட்டு வாரிய அனுமதிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் மீது சி.பி.ஐ., போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு மற்றும் சுற்றுச்சூழல் துறையில், அதிகாரியாக பணியாற்றியவர் சீனிவாச ராவ், இவர் தொழிற்சாலைகளுக்கு மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்குவதாக, சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அதன்பேரில், சி.பி.ஐ., அதிகாரிகள் அவரை கண்காணித்து, கடந்த 20ம் தேதி லஞ்சம் வாங்கியபோது சீனிவாசராவை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து அலுவலக கோப்புகள், ஊழியர்களிடம் விசாரனை நடத்தியதில் லிங்காரெட்டிப் பாளையத்தை சேர்ந்த தனியார் மதுபான நிறுவன இயக்குனர் ரவிச்சந்திரன், மதுபான ஆலைக்கு அனுமதி வாங்க சுற்றுச்சூழல் துறையில் அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றது தெரிய வந்தது. அதையடுத்து ரவிச்சந்திரன், அரவிந்த், கோவையைச் சேர்ந்த ரமேஷ் கண்ணன், புதுச்சேரி சாரம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன், சிவானந்தம் ஆகியோர் மீது ஊழல் தடுப்பு சட்டம் 1988 ன் கீழ் சி.பி.ஐ., ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ