உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற மத்திய குழுவினர் உத்தரவு 

வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற மத்திய குழுவினர் உத்தரவு 

புதுச்சேரி: கிருஷ்ணா நகரில் வாய்க்கால் ஆக்கிரப்புகளை அகற்ற மத்திய குழுவினர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர். புதுச்சேரியில் புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை 2வது நாளாக நேற்று மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அதில், மத்திய இணை செயலர் ராஜேஷ் குப்தா தலைமையிலான குழுவினர் வெங்கட்டா நகர், ரெயின்போ நகர், கிருஷ்ணா நகர், எழில் நகர் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தனர். அப்போது, கிருஷ்ணா நகர் பகுதிக்கு வந்த மத்திய குழுவினர் சாலையில் கழிவுநீர் தேங்கியுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, அப்பகுதி மக்கள் மத்திய குழுவிடம், இப்பகுதியில் வாய்க்கால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக கழிவுநீர் வெளியே வழியின்றி தேங்கியுள்ளதாக தெரிவித்தனர். மேலும், ஆக்கிரமிப்பு குறித்து புகார் அளித்தால், நகராட்சி, பொதுப்பணித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் குற்றச்சாட்டினர். இதையடுத்து, மத்திய குழுவினர் வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை எந்தவித பாரபட்சமும் பார்க்காமல், உடனடியாக அகற்றி வாய்க்கால்களை சீரமைத்து, கழிவுநீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ