உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மத்திய அரசின் திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும்: மத்திய உள்துறை செயலர் உத்தரவு

மத்திய அரசின் திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும்: மத்திய உள்துறை செயலர் உத்தரவு

புதுச்சேரி : புதுச்சேரியில் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் முதன்மை திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும் என மத்திய உள்துறை செயலர் கோவிந்த் மோகன் உத்தரவிட்டார். மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த்மோகன், கூடுதல் செயலாளர் அசுதோஷ் அக்னிகோத்ரி ஆகியோர் அரசு முறை பயணமாக நேற்றுமுன்தினம் புதுச்சேரி வந்தனர். நேற்று காலை 9 மணியளவில் தலைமை செயலகத்தில் புதுச்சேரியின் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் முதன்மை திட்டங்கள் குறித்து அவர்கள் ஆய்வு நடத்தினர்.இந்த ஆய்வுக்கூட்டத் தில் தலைமை செயலாளர் சரத்சவுகான், அரசு செயலர்கள் ராஜூ, மோரே, கேசவன், ஜெயந்த்குமார்ரே, ஜவகர், பல்வாடே, சத்தியமூர்த்தி, நெடுஞ்செழியன், கலெக்டர் குலோத்துங்கன், டி.ஜி.பி., ஷாலினி சிங், ஐ.ஜி., அஜய்குமார்சிங்ளா, அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில், அரசு செயலர் முத்தம்மா, புதுச்சேரியில் அரசு செயல்படுத்தி வரும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விளக்கினார். தொடர்ந்து சீனியர் எஸ்.பி., பிரவீன்குமார் திரிபாதி, புதுச்சேரியில் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் புதிய கிரிமினல் சட்டங்கள் குறித்து விளக்கினார். கூட்டத்தில் மத்திய உள்துறை செயலர் மத்திய நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி