மேலும் செய்திகள்
'இருமொழி கொள்கையில் தமிழகம் உறுதியாக உள்ளது'
11-Sep-2024
புதுச்சேரி: மத்திய அரசின் திட்டங்களை தமிழில் மொழி பெயர்க்க வேண்டும் என அரசு துறைகளுக்கு முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டார். உள்ளாட்சித்துறை, நகராட்சிகள் சார்பில் துாய்மையே சேவை இருவார நலப்பணி நிறைவு விழா கம்பன் கலையரங்கில் நேற்று நடந்தது. விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது;நாடு சுத்தமாக இருக்க வேண்டும் என காந்தி பிறந்த நாளில் உறுதி ஏற்க வேண்டும். இத்திட்டத்தின் பெயர் இந்தியில் உள்ளது. விழிப்புணர்வு ஊர்வலம் சென்ற மாணவர்கள் கையில் வைத்திருந்த பதாகையில் கூட தமிழ் இல்லை. தமிழில் எழுத வேண்டும், படிக்க வேண்டும் என்பதில் அதிகாரிகள் மாறுப்பட்டு இருப்பதிற்கு என்ன காரணம் என தெரியவில்லை.நம்முடையது தமிழ் மொழி. தமிழில் படிக்க வேண்டும் என விரும்புகிறோம். ஆனால் மக்களுக்கு தெரிய வேண்டிய செய்தி கூட தமிழில் இல்லை என்றால் எப்படி மக்களுக்கு புரியும். பிரதமர் நாட்டின் வளர்ச்சிக்காக பல திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். இது குறித்த விளம்பரங்கள் மக்களுக்கு புரிந்துகொள்ள முடியாத நிலையில் உள்ளது. கவர்னருடன் பேசும்போது, இதுபோல விளம்பரங்கள் தமிழில் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.நாம் தெரிவிக்கும் செய்தி, மக்களை சென்றடைய தமிழில் இருக்க வேண்டும். பிரதமர் அறிவித்த, செயல்படுத்தி உள்ள திட்டங்களை தமிழில் மொழி பெயர்த்து கொடுக்க வேண்டும். உள்ளாட்சித்துறை உட்பட அனைத்து துறைகளும் மத்திய அரசு திட்டங்களை தமிழில் கொடுக்க வேண்டும். புதுச்சேரியை சுத்தமாக இருக்க வேண்டும் என அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அதற்காக பல கோடி செலவு செய்து, குப்பை அகற்றும் பணி தனியாரிடம் அளிக்கப்பட்டுள்ளது. இப்பணியை நகராட்சி நிர்வாகம் சரியாக கண்காணிக்க வேண்டும். நமது புதுச்சேரியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற தார்மீக உணர்வு அனைவருக்கும் வரவேண்டும் என பேசினார்.என பேசினார்.
11-Sep-2024