மேலும் செய்திகள்
பழைய பி.டி.ஓ., அலுவலக கட்டடம் இடித்து அகற்றம்
18-Feb-2025
புதுச்சேரி: புதுச்சேரி மேரி ஹாலில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு பிறப்பு - இறப்பு சான்றிதழ் வழங்கும் பிரிவை ஆணையர் கந்தசாமி துவக்கி வைத்தார்.புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள நகராட்சி கட்டடமான மேரி ஹாலில் பல ஆண்டுகளாக பிறப்பு - இறப்பு பதிவு வழங்கும் பிரிவு செயல்பட்டு வந்தது. இந்த பிரிவின் கட்டடம் மட்டும் சேதமடைந்ததால் 2012ம் ஆண்டு முதலியார்பேட்டை நகராட்சி அலுவலகத்திற்கு இந்த பிரிவு இடமாற்றம் செய்யப்பட்டது. அதன் பின், 2014ம் ஆண்டு கன மழையில் நகராட்சி கட்டடம் முழுமையாக இடிந்து விழுந்தது.அதைத் தொடர்ந்து புதிய கட்டடம் கட்டப்பட்டு 2022ம் ஆண்டு மேரி கட்டடம் திறக்கப்பட்டது. பல்வேறு இழுபறிக்கு பின்பு கடந்த ஆண்டு மேரி கட்டடம் முழுமையாக நகராட்சி அலுவலகமாக மாறியது. இந்நிலையில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு மேரி கட்டடத்தில் 'லேகபே' ஓட்டல் எதிரில் பிறப்பு - இறப்பு சான்றிதழ் வழங்கும் பிரிவை நேற்று ஆணையர் கந்தசாமி துவக்கி வைத்தார். இங்கு கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள 1930 முதல் உள்ள பிறப்பு சான்றிதழ் மற்றும் 1954 முதல் உள்ள இறப்பு சான்றிதழ்களை இங்கு பெற்றுக் கொள்ளலாம்.
18-Feb-2025