உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பள்ளிகளிலேயே சான்றிதழ் ஓம்சக்தி சேகர் கோரிக்கை

பள்ளிகளிலேயே சான்றிதழ் ஓம்சக்தி சேகர் கோரிக்கை

புதுச்சேரி: பள்ளிகளிலேயே வருவாய்த்துறை மூலம் சான்றிதழ் வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் கோரிக்கை வைத்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:புதுச்சேரியில் பொதுத்தேர்வு முடிந்த பின்னர், ஒவ்வொரு ஆண்டும், மாணவர்கள் ஜாதி, இருப்பிடம், குடியிருப்பு சான்றிதழ்கள் பெற முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். புதுச்சேரியில், 2001ம் ஆண்டு முதல் பிற்படுத்தப்பட்டோருக்கும், 1964ம் ஆண்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் என்ற ஆண்டு அடிப்படையாக கொண்டு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 2001ம் ஆண்டு மற்றும் 1964 ஆண்டு ஆவணங்களை சமர்பித்து, உடனடியாக சான்றிதழ்கள் வழங்கப்படுவதில்லை. போதிய ஆவணங்கள் வழங்கினாலும், தாசில்தார் அலுவலகங்களில் கால தாமதம் செய்யப்படுகிறது. நல்ல மதிப்பெண் பெறும் மாணவ, மாணவிகள் சிலர், ஒரு சில ஆவணங்கள் இல்லாமல், ஜாதி மற்றும் குடியிருப்பு சான்றிதழ்கள் பெற முடியாமல், மேல் படிப்பை தொடர முடியாத நிலை உண்டாகிறது.பல ஆண்டுகளாக வேலை வாய்ப்பு அலுவலகத்தில், மாணவர்கள் அலைமோதி தங்களின் கல்வி தகுதியை பதிவு செய்யும் முறை இருந்து வந்தது. நான் எம்.எல்.ஏ.,வாக இருந்தபோது பலமுறை இது குறித்து பேசியதன் விளைவாக, தற்போது அந்தந்த பள்ளிகளிலேயே சிறப்பு பதிவு முகாம் நடைபெறுகிறது. இதைபோலவே, மாணவர்கள் சிரமமின்றி ஜாதி மற்றும் குடியிருப்பு, இருப்பிட சான்றிதழ்கள் பெற்றிட அந்தந்த பள்ளிகளிலேயே வருவாய் துறை மூலம் சிறப்பு முகாம்கள் அமைத்து, சான்றிதழ்கள் வழங்க முதல்வர் ரங்கசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை