205 பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு டிச.,9ல் துவக்கம்
புதுச்சேரி: பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு அடுத்த மாதம் 9ம் தேதி துவங்கி நான்கு நாட்கள் நடக்கிறது. புதுச்சேரி பள்ளி கல்வித் துறையில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான ரிசல்ட் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. மொத்தம் விண்ணப்பம் பெறப்பட்ட 340 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 205 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான, சான்றிதழ் சரிபார்ப்பு அடுத்த மாதம் 9ம் தேதி துவங்கி 12ம் தேதி வரை புதுச்சேரி அண்ணா நகரில் உள்ள பள்ளி கல்வித் துறை வளாகத்தில் காலை 10:00 மணி மற்றும் மாலை 3:00 மணி என இரு வேளையும் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அடுத்த மாதம் 9ம் தேதி புதுச்சேரி காரைக்காலை சேர்ந்த ஆங்கில பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. முதல் நாள் 52 பட்டதாரி ஆசிரியர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.10ம் தேதி கணித பட்டதாரி ஆசிரியர்கள், 11ம் தேதி உடற்கல்வியில், 12ம் தேதி லைப் சயின்ஸ், சமூக அறிவியல், பிரெஞ்சு, மாகி, ஏனாம் பிராந்தியத்திற்கான கணிதம், சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.சான்றிதழ் சரிபார்ப்பு நேர்காணலுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் அனைத்து ஒரிஜனல் சான்றிதழ்களுடன், சுய கையொப்பமிட்ட நகல் சான்றிதழ்களையும் கட்டாயம் கொண்டு வர வேண்டும் என, பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது.