இளநிலை பொறியாளர் பணி; 26ல் சான்றிதழ் சரிபார்ப்பு
புதுச்சேரி; இளநிலை பொறியாளர் பணிக்கு தேர்வானவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 26ம் தேதி துவங்குகிறது.இதுகுறித்து பொதுப்பணித்துறை அலுவலக செய்திக்குறிப்பு:புதுச்சேரி பொதுப்பணித்துறையில் 99 இளநிலை பொறியாளர், 68, ஓவர்சீர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டது.அதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இளநிலை பொறியாளர் பணிக்கு வரும் 26, 27 ம் தேதிகளிலும், ஒவர்சீர் பணிக்கு 29ம் தேதியும் நடக்கிறது.அதன்படி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் 2வது மாடியில் நடக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு பணியில் தேர்வர்கள் உரிய சான்றிதழ்களுடன் பங்கேற்க வேண்டும்.இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.