தற்காப்பு பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்
திருக்கனுார்: சோரப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான தற்காப்பு கலை பயிற்சி நிறைவு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.தலைமையாசிரியர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். பட்டதாரி ஆசிரியை லட்சுமி வரவேற்றார். தற்காப்புக் கலை பயிற்சியாளர் கவிதா வழிகாட்டுதல்படி பயிற்சி பெற்ற மாணவியர் செயல்முறை விளக்கம் அளித்தனர்.கராத்தே சங்க துணைத் தலைவர் மதிஒளி கலந்து கொண்டு தற்காப்பு கலையின் முக்கியத்துவம் குறித்து பேசினார். பயிற்சியில் பங்கேற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன. ஆசிரியர் மாணிக்கவேலு தொகுத்து வழங்கினார். ஆசிரியர்கள் சடகோபன், சூரியகுமாரி, ஜீவாதேவி, ராஜேந்திரன், இளவரசி, அலுவலக ஊழியர்கள் மற்றும் கணினி பயற்றுனர் மதுபாலன் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் செல்வகுமரன் செய்திருந்தார். நுாலகர் லட்சுமணன் நன்றி கூறினார்.