உள்ளூர் செய்திகள்

செடல் விழா

அரியாங்குப்பம் : அரியாங்குப்பம் முத்துமாரியம்மன் கோவிலில், செடல் விழாவில் ஏராளமான பக்தர்கள் செடல் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அரியாங்குப்பம், சுப்புராயப்பிள்ளை வீதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் 36ம் ஆண்டு செடல் விழா கடந்த 17ம் தேதி துவங்கியது. தொடர்ந்து, அம்மன் வீதியுலா நடந்தது. முக்கிய விழாவான நேற்று செடல் உற்சவம் நடந் தது. அதில், பக்தர்கள் அலகு குத்தி, தேரை இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை