உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முத்தியால்பேட்டை தொகுதியில் சந்துருஜி தீவிர ஓட்டு வேட்டை

முத்தியால்பேட்டை தொகுதியில் சந்துருஜி தீவிர ஓட்டு வேட்டை

புதுச்சேரி: முத்தியால்பேட்டை தொகுதி அம்பேத்கர் நகர், கல்லறை தெரு உள்ளிட்ட பகுதிகளில், சுயேட்சை வேட்பாளர் சந்துருஜி நேற்று வீடு வீடாக சென்று, காஸ் ஸ்டவ் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார். அப்போது, அவர், பொதுமக்களிடம் குறைகள் மற்றும் தேவைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து, அவர், குடிநீர், வடிகால், சாலை, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகளை விரைவில் தீர்த்து வைப்பேன் என உறுதியளித்தார். மேலும், அவர், “மக்களின் நலனே எனது முதன்மை. நீங்கள் அளிக்கும் ஆதரவை வீணாக்காமல், உங்கள் நம்பிக்கையை காப்பாற்றுவேன்” என தெரிவித்தார். இந்த நிகழ்வில், உள்ளூர் பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டு உற்சாகமாக வரவேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !