உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சமையல் கலைஞர் தற்கொலை

சமையல் கலைஞர் தற்கொலை

பாகூர்: சமையல் கலைஞர் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பாகூர், திருமூலநாதர் நகரைச் சேர்ந்தவர் சக்திவேல் 47; சமையல் கலைஞர். திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். சக்திவேல் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் அவரது குடும்பத்தினர், அவரை கண்டித்துள்ளனர். இதனால், சில நாட்களாக, வீட்டில் யாரிடமும் பேசாமல் இருந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டின் மாடியில் அவர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை