மேலும் செய்திகள்
பெண்ணை ஆபாசமாக சித்தரித்த தென்காசி வாலிபர் கைது
24-Apr-2025
புதுச்சேரி : புதுச்சேரி இளம்பெண்ணுக்கு ஆபாசமாக எஸ்.எம் எஸ்., அனுப்பிய சென்னை வாலிபரை, சைபர் கிரைம் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.புதுச்சேரி, மூலகுளம் பகுதியை சேர்ந்தவர் இளம்பெண். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன், அறிமுகமில்லாத மொபைல் எண்ணிலிருந்து தொடர்ந்து ஆபாச குறுஞ்செய்தி வந்தது. அதிர்ச்சியடைந்த அப்பெண் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.போலீசார் வழக்குப் பதிந்து, இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து, ஆபாச எஸ்.எம்.எஸ்., அனுப்பிய நபரை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டர். அந்த பெண்ணிற்கு வந்த ஆபாச எஸ்.எம்.எஸ்., இணையதளத்தை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.எஸ்.எம்.எஸ்., அனுப்பிய நபர் சென்னை, மேடவாக்கத்தை சேர்ந்த பாஸ்கரன், 32, என்பது தெரியவந்தது. அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர் வைத்திருந்த மொபைல் போனை ஆய்வு செய்ததில் இன்ஸ்ட்ராகிராமில் போலியான அக்கவுண்ட் தொடங்கி அதன் மூலம், ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது தெரியவந்தது.அவரை போலீசார் கைது செய்து, நேற்று கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். தெரியாத நபர்களுக்கு, ஆண் நண்பர்களுக்கு இளம் பெண்கள் போட்டோவை அனுப்ப வேண்டாம். பேஸ்புக்கில் ரெக்வஸ்ட் அக்செப்ட் கொடுக்க வேண்டாம். அறிமுகம் இல்லாத நபரிடம் இருந்து மொபைல் போன் தொடர்ந்து வந்ததால், 1930 எண்ணில் சைபர் போலீசில் புகார் செய்யலாம் என, சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.
24-Apr-2025