தலைமை நீதிபதி கவர்னர் சந்திப்பு
புதுச்சேரி: புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதனை, ஐகோர்ட் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி சந்தித்து பேசினார். அரசு முறைப் பயணமாக புதுச்சேரி வந்துள்ள சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, மரியாதை நிமித்தமாக கவர்னர் கைலாஷ்நாதனை, அவரது மாளிகையில் சந்தித்து பேசினார். முன்னதாக, கவர்னருக்கு, தலைமை நீதிபதி பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.