உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  வாய்க்கால் அமைக்கும் பணி முதல்வர் துவக்கி வைப்பு

 வாய்க்கால் அமைக்கும் பணி முதல்வர் துவக்கி வைப்பு

புதுச்சேரி: இந்திரா நகர் தொகுதி வழுதாவூர் சாலையில் கான்கிரீட் வாய்க்கால் அமைக்கும் பணியினை முதல்வர் ரங்கசாமி பூஜை செய்து துவக்கி வைத்தார். இந்திரா நகர் தொகுதி, வழுதாவூர் சாலையில் மேட்டுப்பாளையம் சந்திப்பு முதல் அய்யங்குட்டிப்பாளையம் வரை பொதுப்பணித்துறை மூலம் ரூ.6.83 கோடி மதிப்பில் சாலையின் இருபுறமும் 'யு' மற்றும் 'ட' வடிவ புதிய கான்கிரீட் வாய்க்கால் அமைக்கும் பணி துவக்க விழா நேற்று நடந்தது. முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கி, பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். அமைச்சர் லட்சுமிநாராயணன், அரசு கொறடா ஆறுமுகம் முன்னிலை வகித்தனர்.அரசு செயலர் முத்தம்மா, தலைமை பொறியாளர் வீரசெல்வம், செயற்பொறியாளர் சீனுவாசன், உதவி பொறியாளர் பாலாஜி, இளநிலைப் பொறியாளர் செந்தமிழ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, ரெட்டியார்பாளையம் கனகன் ஏரியை ரூ.1.47 லட்சம் மதிப்பில் துார்வாருதல் மற்றும் கரைகளை மேம்படுத்தி கான்கிரீட் நடைபாதை அமைக்கும் பணியையும் முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி