உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வீராம்பட்டினத்தில் ரூ.19.64 கோடியில் குடிநீர் டேங்க் கட்டும் பணி: முதல்வர் துவக்கி வைப்பு

வீராம்பட்டினத்தில் ரூ.19.64 கோடியில் குடிநீர் டேங்க் கட்டும் பணி: முதல்வர் துவக்கி வைப்பு

அரியாங்குப்பம்: வீராம்பட்டினத்தில் ரூ.19.64 கோடி மதிப்பீட்டில், மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டும் பணியை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.வீராம்பட்டினத்தில், தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன், ஒருங்கிணைந்த குடிநீர் திட்டத்தின் கீழ், 19.64 கோடி ரூபாய் மதிப்பில், 10 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கும் பணியை, முதல்வர் ரங்கசாமி நேற்று துவக்கி வைத்தார். அமைச்சர் லட்சுமிநாராயணன், பாஸ்கர் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை செயலர் ஜெயந்தகுமார், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன், கண்காணிப்பு பொறியாளர் பாலசுப்பிரமணியன், அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், உதவி பொறியாளர் நாகராஜன், செயற்பொறியாளர் உமாபதி ஸ்ரீதரன், இளநிலை பொறியாளர் பாஸ்கர் உட்பட அதிகாரிகள், கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர். இதே போல், காலாப்பட்டு தொகுதி ஆலங்குப்பத்தில்,16.33 கோடி ரூபாய் மதிப்பில் இரண்டடுக்கில் 6 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டும் பணியையும், முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார். கல்யாணசுந்தம் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். மணவெளி தொகுதி, , தவளக்குப்பம் அடுத்த நல்லவாடு பகுதியில், ரூ.13 லட்சத்தில், யூ வடிவ வாய்க்கால் அமைக்கும் பணியும், விக்டோரியா நகரில் ரூ. 4 லட்சத்தில் வடிகால் அமைக்கும் பணியை சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார். தொடர்ந்து, அரியாங்குப்பம் தொகுதி, ஆனந்தா நகரில் ரூ.15 லட்சத்தில் சிமென்ட சாலை அமைக்கும் பணியை பாஸ்கர் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி