ஆஸ்கர் இ- மோட்டார்ஸ் ஷோரூம் முதல்வர் திறந்து வைப்பு
புதுச்சேரி: புதுச்சேரி முதலியார்பேட்டை அனிதா நகர் 100 அடி சாலை (ரயில்வே சுரங்க பாதை) அருகில் ஆஸ்கர் இ- மோட்டார்ஸ் புதிய ேஷாரூம் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில், சிறப்பு அழைப்பளராக முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு புதிய ஷோரூமை திறந்து வைத்தார். சம்பத் எம்.எல்.ஏ., குத்து விளக்கு ஏற்றி முதல் விற்பனையை துவக்கி வைத்தார். என்.ஆர். காங்., பிரமுகர்கள் ராஜகோபால், அழகானந்தம், சத்திரிய மகா சபா மாநில தலைவர் கிருஷ்ணமூர்த்தி, முதலியார்பேட்டை பா.ஜ., பிரமுகர் சத்தியராஜ், சபரிநாதன், பா.ம.க., அமைப்பாளர் கணபதி, மணக்குள விநாயகர் கல்விக் குழுமம் செயலாளர் நாராயணசாமி, தொழிலதிபர் மணிவண்ணன், ஐ.ஜே.கே., சக்திவேல், சண்முகம், கோபு ஆகியோர் கலந்து கொண்டனர். திறப்பு விழா சலுகையாக மூன்று எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஒரு பைக் வாங்கும் பணத்தில் மூன்று பைக்குகள் கிடைப்பதால் மக்கள் ஆஸ்கர் இ- மோட்டார்சிற்கு வந்து, இ- ஸ்கூட்டர்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆஸ்கர் இ மோட்டார்ஸ் புதுச்சேரி டீலர் அரசி எண்டர்பிரைசஸ் உரிமையாளரும், ஐ.ஜே.கே., கட்சி முன்னாள் அமைப்பாளர் ஜெகன் (எ) ஜெகநாதன் நன்றி கூறினார்.