உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ெஷட் சீரமைக்கும் பணி முதல்வர் துவக்கி வைப்பு

ெஷட் சீரமைக்கும் பணி முதல்வர் துவக்கி வைப்பு

புதுச்சேரி: இந்திரா நகர் தொகுதியில், மாணவர்கள் உணவு சாப்பிடும் ெஷட் சீர் செய்வதற்கான பணியை முதல்வர் ரங்கசாமி துவங்கி வைத்தார்.இந்திரா நகர் தொகுதிக்குட்பட்ட முத்திரையர்பாளையம் அருட்செல்வி ஆயி அம்மாள் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. மாணவர்கள் மதிய உணவு சாப்பிடும், ெஷட் சேதமடைந்தது. ஆசிரியர்கள், பெற்றோர் கோரிக்கையின் பேரில், 35.60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.அதற்கான பணியை முதல்வர் ரங்கசாமி நேற்று துவக்கி வைத்தார். அமைச்சர் லட்சுமிநாராணயன், அரசு கொறடா ஆறுமுகம் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில், என்.ஆர்., காங்., நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி