உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இலவச சைக்கிள் முதல்வர் வழங்கல்

இலவச சைக்கிள் முதல்வர் வழங்கல்

புதுச்சேரி: சுப்பையா நகர் சேக்கிழார் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்களை முதல்வர் ரங்கசாமி, அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ., ஆகியோர் வழங்கினர். தட்டாஞ்சாவடி தொகுதி, சுப்பையா நகரில் உள்ள சேக்கிழார் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைமையாசிரியர் டார்லிங் வின்சி இந்திரா வரவேற்றார். பெண் கல்வித் துணை இயக்குநர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி, அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ., ஆகியோர் மாணவர்களுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கி, வாழ்த்தினர். பட்டதாரி ஆசிரியர் ஷீலா விநாயகர் நோக்கவுரையாற்றினார். ஆசிரியர்கள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை