உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சொந்த தொகுதி பூமி பூஜையை புறக்கணித்த முதல்வர் ரங்கசாமி

சொந்த தொகுதி பூமி பூஜையை புறக்கணித்த முதல்வர் ரங்கசாமி

மு தல்வர் ரங்கசாமியின் தொகுதியான தட்டாஞ்சாவடி தொகுதி, வெங்கடேஸ்வரா நகர் மேற்கில் உள்ள ஜெயராம் நகரில், கடந்த 3ம் தேதி ரூ.33.57 கோடி செலவில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, கீழ்நிலை நீர் தேக்க தொட்டி கட்டுமானம் மற்றும் சேரன் வீதியில் பெரிய வாய்க்காலை சீரமைப்பு ஆகிய பணிகளை முதல்வர் ரங்கசாமி தலைமையில் பூமி பூஜை செய்து துவக்க பொதுப்பணித்துறையினர் ஏற்பாடு செய்திருந்தனர். முதல்வர் வருகையையொட்டி, விழா ஏற்பாடுகள் விமர்சையாக செய்யப்பட்டிருந்தது. பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டிருந்தனர். இந்நிலையில் விழாவிற்கு, முன்னாள் எம்.எல்.ஏ., அசோக் ஆனந்தை அழைக்காததை அறிந்த முதல்வர், விழாவிற்கு வரவில்லை என அதிகாரிகளிடம் கூறினார். விழா ரத்தானதை அறிந்த பொதுமக்கள், நேரடியாக முதல்வர் வீட்டிற்கு சென்று விழாவிற்கு வருமாறு அழைத்தனர். அவர்களிடம், விரைவில் பெரிய வாய்க்கால் சீரமைப்பு பணிக்கு வரும்போது மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணிகளையும் சேர்த்து துவக்கி வைக்கிறேன் என்றார். இதனால், பூமி பூஜைக்கு அழைக்க சென்றவர்கள் கவலையுடன் திரும்பி சென்றனர். மாஜி எம்.எல்.,ஏ.,வை அழைக்காததால், தனது தொகுதி பூமி பூஜையை முதல்வர் புறக்கணித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை