உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முதல்வரின் அறிவிப்பு வெற்று அறிக்கை இ.கம்யூ., மாநில செயலாளர் சலீம் சாடல்

முதல்வரின் அறிவிப்பு வெற்று அறிக்கை இ.கம்யூ., மாநில செயலாளர் சலீம் சாடல்

புதுச்சேரி: விடுதலை நாள் விழாவில் முதல்வரின் அறிவிப்பு வழக்கம் போல் வெற்று அறிக்கையாக தான் உள்ளது என இ.கம்யூ., தெரிவித்துள்ளது.இதுகுறித்து மாநில செயலாளர் சலீம் அறிக்கை:புதுச்சேரி விடுதலை நாள் விழாவில், முதல்வர் ரங்கசாமி ரூ.4,750 கோடி அளவிற்கு புதிய திட்டங்களை பட்டியலிட்டுள்ளார். வழக்கம் போல் வெற்று அறிக்கையைத் தான் முதல்வர் வாசித்துள்ளார்.மத்திய அரசின் ஒப்புதலுக்கு திட்டங்கள் அனுப்பப்பட்டுள்ளன. உள் கட்டமைப்பிற்கான திட்டங்களுக்கு டெண்டர் கோரப்பட்டு உள்ளதாக கூறியுள்ளார். ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகள் மற்றும் கட்டமைப்புகளுக்குநிதி ஒதுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகள் சுகாதார வசதியின்றி,நல்ல குடிநீர், உணவு இன்றி, மாணவர்கள் மோசமான நிலையில் உள்ளனர்.காமராஜ் சாலை - மறைமலை அடிகள் சாலையைஇணைக்கும் உப்பனாறு வாய்க்கால் மேம்பாலம் கட்டி முடிக்க முடியாமல் உள்ளது. செல்லிப்பட்டு தடுப்பணை சீரமைப்பதற்கு பல தடவை ஒப்பந்தம் புள்ளிகள் கோரப்பட்டடும் பணி துவங்கவில்லை. புதுச்சேரியில் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு 10 கிலோ அரிசியும், 2 கிலோ சர்க்கரையும் வழங்கப்பட்டு வருவதாக முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல பேசியுள்ளார்.விடுதலை நாள் விழாவில், முதல்வரின் அறிக்கை வழக்கம் போல பொய்களைஉள்ளடக்கியதாகவே உள்ளது. இவ்வாறு அவர், கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை