உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  குழந்தைகளுக்கு வலிப்பு நோய் அதிகம் ஏற்படுகிறது

 குழந்தைகளுக்கு வலிப்பு நோய் அதிகம் ஏற்படுகிறது

புதுச்சேரி: குழந்தைகளுக்கு தான் வலிப்பு நோய் அதிகம் ஏற்படுகிறது என, ஜிப்மர் உதவி பேராசிரியர் ரம்யா சீனிவாச ரங்கன் பேசினார். ஜிப்மர் குழந்தைகள் நல துறை சார்பில், குழந்தை பருவ வலிப்பு நோய் குறித்த ஒரு நாள் கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கில் ஜிப்மர் குழந்தைகள் மருத்துவ துறை உதவி பேராசிரியர் ரம்யா சீனிவாச ரங்கன் பேசியதாவது: உலக அளவில் 1,000 குழந்தைகளில் 3 முதல் 6 பேர் வரை கை, கால் வலிப்பு நோய் ஏற்படுகிறது. இந்தியாவில் 1,000 குழந்தைகளில் 5.59 பேர் வரையிலும் இந்நோய் பாதிப்பு உள்ளது. வலிப்பு நோய்க்கு ஆரம்ப கால, துல்லியமான நோயறிதல், சிகிச்சை மிக முக்கியமானது. உலக அளவில் 40 சதவீதம் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வலிப்பு நோய் தாக்கம் ஏற்படுகிறது. 70 முதல் 80 சதவீதம் வரையிலான குழந்தைகள் ஒன்று அல்லது இரண்டு கூட்டு மருந்துகளால் வலிப்பு நோய்களில் இருந்து விடுபடுகின்றனர்' என்றார். தொடர்ந்து, வலிப்பு நோய் குறித்த மூட நம்பிக்கை, தவறான சிகிச்சை வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முதுநிலை மாணவர்களுக்கு வலிப்பு நோய் குறித்த சுவரொட்டி போட்டி நடத்தப்பட்டது. அந்த படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி