உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பல் மருத்துவ கல்லுாரியில் குழந்தைகள் தின விழா

பல் மருத்துவ கல்லுாரியில் குழந்தைகள் தின விழா

புதுச்சேரி: கோரிமேடு மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவ நிறுவனத்தின் குழந்தைகள் பல் மருத்துவ பிரிவில் குழந்தைகள் தின விழா நடந்தது.கல்லுாரி முதல்வர் கென்னடி பாபு தலைமை தாங்கி, குழந்தைகள் பல் மருத்துவ பிரிவில் நவீன முறையில் பல் மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு மதியம் 3:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை மாலை நேர சிறப்பு சிகிச்சை பிரிவு செயல்படுகிறது. நவீன வசதிகளுடன் கூடிய இலவச நடமாடும் பல் மருத்துவ வாகனம் மூலம் பள்ளிகளுக்கே சென்று இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது' என்றார்.குழந்தைகள் பல் மருத்துவத்துறை தலைவர் அருண்பிரசாத் ராவ், இனிப்பு வகைகளை தவிர்ப்பதினாலும், காலை, மாலை பல் துலக்குவதால் பல் சம்பந்தப்பட்ட பல நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என, அறிவுரை வழங்கினார்.விழாவில், குழந்தைகளுக்கான வாய் சுகாதாரம் குறித்த ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக, துறை சார்ந்த மருத்துவர்கள் பல் மற்றும் வாய் நோய்கள், குறைபாடுகள் குறித்து விழிப்பணர்வு ஏற்படுத்தி, செயல்முறை விளக்கம் அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை