உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குடிதாங்கி அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி உற்சவம்

குடிதாங்கி அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி உற்சவம்

பாகூர்: சேலியமேடு குடிதாங்கி அம்மன் கோவிலில், சித்ரா பவுர்ணமி திருவிழா நடந்தது.பாகூர் அடுத்த சேலியமேடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற குடிதாங்கி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்ரா பவுர்ணமி திருவிழா நேற்று முன்தினம் நடந்தது.இதையொட்டி, காலை சேலியமேடு குளக்கரையில் இருந்து கரகம் அலங்கரித்து வீதியுலா, மதியம் சாகை வார்த்தல் நடந்தது. மாலை குதிரை விடுதல், இரவு அபிஷேக ஆராதனை, கும்பம் கொட்டி அன்னம் படைக்கப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவு சிறப்பு அலங்காரத்தில், குடிதாங்கி அம்மன், பறந்துகட்டி ஐயனாரப்பன் சுவாமி வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை