சாரதா கங்காதரன் கல்லுாரியில் சைட்டேஷன் டே விழா
புதுச்சேரி: சாரதா கங்காதரன் கல்லுாரியில் மாணவ, மாணவிகளின் சாதனைகள் மற்றும் அவர்களின் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் விதமாக 'சைட்டேஷன் டே' விழா நடந்தது.கல்லுாரியின் வேலை வாய்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் ஆன், 2024-25ம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிக்கையை வாசித்தார். அதில், சென்னையில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் இதுவரை 130க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வேலைவாய்ப்பினை பெற்றுள்ளதாக தெரிவித்தார். கல்லுாரியின் துணைத் தலைவர் பழனிராஜா தலைமை தாங்கினார். தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சக துணை மண்டல வேலைவாய்ப்பு அதிகாரி கோட்டூர் சாமி பங்கேற்று, வேலை வாய்ப்பை பெற மாணவ, மாணவிகள் தங்களின் தனித் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார். உதவி வேலை வாய்ப்பு அதிகாரி ரவீந்திரநாத் மண்டல், வேலை வாய்ப்பினைப் பெற்ற மாணவ மாணவிகளை வாழ்த்தி பேசினார். கல்லுாரி முதல்வர் பாபு வரவேற்றார். விழாவில், வேலை வாய்ப்பினை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டு, கவுரவிக்கப்பட்டனர்.