புதுச்சேரி கடற்கரையில் துாய்மை பணி
புதுச்சேரி; புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேள னத்தின் சார்பில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கடற்கரையில் துாய்மை பணி நடந்தது.சம்மேள தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் பிரேமதாசன், பொதுச்செயலாளர் முனுசாமி, அமைப்பு செயலாளர் கலியபெருமாள், துணை தலைவர்கள் ராஜலட்சுமி, மகேஷ், துணை பொதுச் செயலாளர்கள் பச்சையப்பன், மணிவாணன், செயலாளர்கள் உதயகுமார், நாதன், பாஸ்கர், ஐயனார், அலுவலக செயலாளர் செல்வக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள், இணைப்பு சங்க பொறுப்பாளர்கள் துாய்மை பணியில் ஈடுபட்டனர். கடற்கரையில் கிடந்த பிளாஸ்டிக் குப்பைகள், உடைந்த பாட்டீல்களை அப்புறப்படுத்தினர். தொடர்ந்து உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். உலக சுற்றுச்சூழல் தினத்தின் முக்கியத்துவம் குறித்து செயல் தலைவர் ராதாகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார். பொருளாளர் வானவரம்பன் நன்றி கூறினார்.