மேலும் செய்திகள்
தேனியில் ஆசிரியர் தின விழா
06-Sep-2025
பாகூர்: பாகூர் அரசு ஆண்கள் நடுநிலைப்பள்ளியில், காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. துாய்மையே சேவை இருவார விழாவையொட்டி, நடந்த நிகழ்ச்சிக்கு, தலைமையாசிரியர் பத்மாவதி தலைமை தாங்கினார். ஆசிரியர் பிரபாவதி வரவேற்றார். அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை ஜெயபாரதி, சாந்தலட்சுமி காலநிலை மாற்றம் குறித்து விளக்கினர். பள்ளியின் 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, ஆசிரியர்கள் துரைசாமி, பாக்கியலட்சுமி, தம்பி ராஜலட்சுமி, வினோத், சிவபாலன் செய்திருந்தனர். மாணவர் புகழ்நிலவன் நன்றி கூறினார்.
06-Sep-2025